வைகை அணையில் தெர்மாகோலை மிதக்க விடும் ஐடியா எப்படி வந்தது என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்.
வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க சில ஆண்டுகளுக்கு முன் அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோலை மிதக்க விட்டார். இது அப்போது கேலி கிண்டலுக்கு உள்ளானது. அப்போது முதல் செல்லூர் ராஜு, தெர்மகோல் ராஜு என கிண்டலாக அழைப்பட்டார்.
இந்நிலையில் இந்த எண்ணம் எப்படி உதித்தது என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, என்னை அனைவரும் தெர்மாகோல் விஞ்ஞானி என கூறுகின்றனர். இந்த தெர்மாகோல் ஐடியா எனக்கு தோன்றியது அல்ல. பல நாடுகளில் நீர் ஆவியாவதை தடுக்க அணைகள், ஏரிகளில் தெர்மாகோல் பயன்படுத்துவதாக பொறியாளர்கள், ஆட்சியர் ஆகியோர் கூறினர். அதைத்தான் நான் செய்தேன் என கூறியுள்ளார்.