Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுக்கு வரும் ஊரடங்கு: முடியாத கொரோனா! – சென்னையில் 103 பேருக்கு கொரோனா!

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (08:16 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு இந்த வாரத்துடன் முடிய உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் குறையாமல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம்  முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் மக்கள் பலர் கொரோனா விழிப்புணர்வு இல்லாமலும், ஊரடங்கை பின்பற்றாமல் சுற்றி வருவதும் அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. கடந்த சில நாட்களில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 121 பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் 108 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 7 குழந்தைகள் உட்பட 96 பேரும், செங்கல்பட்டில் 3 குழந்தைகள் மற்றும் 9 பேரும், காஞ்சிபுரத்தில் ஒருவரும், கள்ளக்குறிச்சியில் 3 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு இந்த வாரத்தில் முடிய உள்ள நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என பல அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments