Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னணு வாக்குப்பதிவில் எனக்கு நம்பிக்கை உண்டு., கார்த்திக் சிதம்பரம்

Siva
புதன், 14 பிப்ரவரி 2024 (08:06 IST)
மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்திக் சிதம்பரம் இதுகுறித்து கூறிய போது மின்னணு வாக்குப் பதிவுகள் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் அதில் முறைகேடு செய்ய வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை பாஜக தேர்தலில் வெற்றி பெறும்போது மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு செய்து தான் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சியினர் சிலர் கூறுவது உண்டு. ஆனால் எதிர்க்கட்சி வெற்றி பெறும் போது மட்டும் மின்னணு வாக்குப்பதிவு குறித்து அந்த கட்சிகள் வாய் திறப்பதில்லை.

இந்த நிலையில் ஆரம்பம்  முதல் மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு செய்ய முடியாது என்று கூறிவரும் கார்த்திக் சிதம்பரம் தற்போது மீண்டும் ஒருமுறை மின்னணு வாக்குப்பதிவில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவி பேட் அமைத்து ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்கு நடவடிக்கை எடுத்தால் பலரது சந்தேகங்கள் தீரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சிதம்பரம் அவர்களின் இந்த யோசனையை தேர்தல் ஆணையம் பின்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments