தர்மபுரி மாவட்டத்துக்கு சென்று 'மக்களுடனான பயணம்’ என்ற நிகழ்ச்சியில் அங்குள்ள மக்களை சந்தித்து பேசிய மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வூட்டும் விதமான பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
’இந்த நல்லம்பள்ளி ஊரில் பள்ளிக்கூடம் இல்லை. மாறாக ஊர் முழுவதும் மதுக்கடைகள் உள்ளன. அரை நூற்றாண்டுகாலமாக கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும் மதுவை ஒழிக்க, மது விலக்கு கொண்டுவந்து ஒரேநாளில் சாத்தியமாக்க முடியாது.
மேலும் உங்கள் மதிப்புள்ள ஓட்டுக்களை இனியும் விற்கக் கூடாது. பணத்துக்காக ஓட்டு போடக் கூடாது. கடவுளுக்கு விரதம் இருப்பதுபோல எண்ணி தேர்தலில் ஓட்டு போடுங்கள்.
முக்கியமாக வரும் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். நாங்கள் உங்களின் மனதை தொட்டு விட்டோம். மக்களின் நன்மை ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மக்கள் நீதி மையம் செயல்படுகிறது. உங்களை நம்பி குரலை உயர்த்திவிட்டேன். எங்கள் கைகளுடன் உங்கள் கைகளும் இணைந்தால்தான் நல்ல மாற்றம் சாத்தியமாகும் . இவ்வாறு அவர் பேசினார்.’