Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி பிரச்சனைக்காக சுமந்த்ராமன் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (16:48 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். காவிரி பிரச்சனை கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வந்தபோதிலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிக்கு பின்னரும் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை தமிழக மக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. இதனால் தமிழகமே கொந்தளித்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்

இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் சுமந்த் ராமன் தனது டுவிட்டரில் காவிரி பிரச்சனைக்காக ஐபிஎல் போட்டிகளுக்கு வர்ணனை செய்ய போவதில்லை என்ற அதிரடி முடிவை அறிவித்துள்ளார். மேலும் எந்த தொலைக்காட்சியிலும் ஐபிஎல் குறித்த விவாதத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும், விவசாயிகளுக்காக தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது என்றும், விளையாட்டை விட வாழ்க்கையில் எத்தனையோ விஷயம் இருக்கின்றது என்பதை அனைவரும் புரிந்து கொண்டு தங்களால் முடிந்தளவு இந்த போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த கூடாது என்று பல்வேறு கட்சி தலைவர்கள் கூறி வரும் நிலையில் சுமந்த் ராமனின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதாக உள்ளது. சென்னையில் உள்ள இளைஞர்கள் ஐபிஎல் போட்டியை நேரடியாக காண செல்லாமல், காவிரி போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு தமிழக மக்கள் என்றால் யார்? என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments