ரஜினி கமல் இணைந்தால்.. அதிமுக வாக்கு வங்கி பாதிக்குமா...? அமைச்சர் ஜெயகுமார் பதில் !
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழக அரசியல் களத்தில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் ஏற்கனவே அரசியல் கட்சி ஆரம்பித்து மூன்று வருடங்களாக கட்சியை நடத்தி வருகிறார். இருப்பினும் ரஜினி குறித்த செய்திகள் ஏற்படுத்தும் பரபரப்பின் பாதி அளவு கூட கமல்ஹாசனின் செய்திகள் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் பூஜை மார்ச் 5ம் தேதி நடைபெறும் என்றும் இதனை அடுத்து இருவரும் அரசியலிலும் இணைந்து செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ரஜினியின் நெருங்கிய வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது கமல் கட்சியுடன் கூட்டணி வைக்க ரஜினி விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் கமல் கட்சி மட்டுமின்றி அவர் எந்த கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு விரும்பவில்லை என்றும் தன்னுடைய கட்சியில் முக்கிய தலைவர்களை சேர்த்து கொள்ள மட்டுமே அவர் விரும்புவதாகவும் கூறியுள்ளார்கள்.
ஆரம்பத்தில் ரஜினிகாந்த் கூறியபடி 234 தொகுதிகளிலும் ரஜினி கட்சியின் வேட்பாளர்கள் தான் போட்டியிடுவார்கள் என்று யாருடனும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ரஜினிகாந்த் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில் நேற்று பேட்டி அளித்த கமல்ஹாசன், ரஜினி உடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக சூசகமாக தெரிவித்தார். கமல் ரஜினியுடன் இணைந்து செயல்பட விருப்பப்பட்டாலும், ரஜினி கமலுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் இல்லை என்ற நிலையில் தான் இப்போது வரை உள்ளார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வட கிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் இடையே வன்முறை வெடித்தது.
இதில் தற்போதைய நிலவரப்படி 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி கலவரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே காரணம். மேலும் உளவுத்துறை சரியாக செயல்பாடதும் காரணம்.
இது போன்ற போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் ஆரம்பித்திலேயே கிள்ளி எறிய வேண்டும். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும், வன்முறையை அடைக்க முடியவில்லை என்றால் பதவி விலகுங்கள்” என கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,சபாஷ் நண்பர்@rajinikanthஅவர்களே, அப்படி வாங்க.இந்த வழி நல்ல வழி. என பதிவிட்டிருந்தார். இதற்கு கமலின் ரசிகர்களும், மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவாளர்களும் கடும் விமர்சனங்களை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில்,ரஜினி, கமல் இருவரும் அரசியலில் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி கமல் இருவரும் இணைந்தாலும் , அவர்களின் கூட்டணி குறித்து திமுகதான் கவலைபபட வேண்டும்; அதிமுகவின் வாக்கு வங்கியை ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.