Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அப்படி என்றால்... இத்தனை நாட்களாய் கடையில் போட்ட இறைச்சி இதுதானா...?

அப்படி என்றால்... இத்தனை நாட்களாய் கடையில் போட்ட இறைச்சி இதுதானா...?
, புதன், 21 நவம்பர் 2018 (16:47 IST)
கடந்த 17ஆம் தேதி தேதியன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் 2000 கிலோ நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டது என செய்திகள் பரவியது. இதனால் தமிழகமெங்கிலும், முக்கியமாக சென்னையில் இறைச்சி விற்பனை அடிவாங்கியது.
webdunia
இதனிடையே பிடிபட்டது நாய் கறி இல்லை ஆட்டுக்கறிதான் என கூறப்பட்டது. இதனை டெஸ்ட் செய்ய அந்த கறியானது லேபிற்கு அனுப்பப்பட்டது.
 
இதுகுறித்து விசாரிக்க கறி எங்கிருந்து வந்ததோ அதே பகுதிக்கு சென்று விசாரிக்க அதிகாரிகள் ஜோத்பூர் விரைந்துள்ளனர். விரைவில் வந்தது நாய்க் கறியா அல்லது ஆட்டுக்கறியா என்பது தெரிந்துவிடும்
.
webdunia
இந்நிலையில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இறைச்சி நாய் இறைச்சி என்று செய்திகள் வெளியானதால் மாமிசம் யாருக்கு அனுப்பப்பட்டது என்று அறிந்து கொள்வதற்காக போலீஸார்  ஜோத்பூர் செல்லுகின்றனர்.
 
 
மேலும் சென்னை எழும்ப்பூர் ரயில் நிலையத்தில் 20 பெட்டிகள் நிறைய 2 டன் மீன் இறைச்சி வந்துள்ளதாக அனைவரும் நினைத்தனர்.


ஆனால் இதை யாரும் பெற்றுக்கொள்ள வராததால் அங்கு அழுகிய வாடை வீசியது.

 
உடனே விரைந்து வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதை சோதனையிட்டனர்.அப்போதுதான் அது மீன் இறைச்சி இல்லை என்றும் நாயின் வாலைப் போன்று இருந்ததால் இதை நாய் இறைச்சி என உறுதி செய்தனர்.
webdunia
மேலும் இதை பற்றி உறுதி செய்வதற்காக அந்த இறைச்சியை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கும்,கொடுங்கையூர் குப்பைக்கிடங்கிற்கும்  அனுப்பியுள்ளனர்.
 
சில நாட்களாக தமிழக மக்களைக் குழப்பி வரும் இந்த இறைச்சி விஷயத்தில் இது மீன் கறியா, ஆட்டுக் கறியா, மாட்டுக் கறியா,நாய் கறியா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
webdunia
இந்த வழக்கை விசாரணக்கு எடுத்துள்ள ரயில்வே போலீஸார்  இது பற்றிய விசாரணைக்காக ஜோத்பூர் செல்ல இருக்கிறார்கள்.
 
கூடிய விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் எனவும் இந்த இறைச்சி குறித்த குழப்பம் விரைவில் நீங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
அவசர வழக்காக இதை எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும் எனவும், இறைச்சி குறித்து ஆய்வு செய்து உடனடியாக  அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று மாலை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிதீவிர கனமழை ! வட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை