Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஆட்சியரின் காரின் முன்பு தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட தந்தையை வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு!

ஆட்சியரின் காரின் முன்பு தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட தந்தையை  வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு!

J.Durai

, செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (09:24 IST)
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயசாரதி இவரது கணவர் உயிரிழந்த நிலையில் தனது மகன் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார்
 
விஜயசாரதி கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனது தந்தை விபத்தில் சிக்கி முதுகுத்தண்டு பாதிப்பு ஏற்பட்டு கால்கள் செயலிழந்து நடக்க முடியாத நிலையில் மருத்துவ செலவுகளுக்காகவும்,குடும்பச் செலவுகளுக்காகவும் தங்களது சொத்தை விற்க முயற்சி செய்தபோது ஆண்டிபட்டியைச் சேர்ந்த ராம் சுந்தர் என்ற நபர் தங்களது நிலத்திற்கு போலி பத்திரம் தயார் செய்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார் 
 
தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட தந்தையை அழைத்து வந்து ஆட்சியர் காரின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் 
 
இதுகுறித்து 3 ஆண்டுகளாக புகார் தெரிவித்து வருவதாகவும் இதுவரை நடவடிக்கை இல்லை என்றும் தற்போது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருப்பதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து  கொள்வதை தவிர வேறு வழி இல்லை என தெரிவித்தனர் 
 
பின்னர் ஆண்டிபட்டி தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு வாரத்திற்கு பின் பங்குச்சந்தையில் சிறிய அளவில் இறக்கம்.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!