இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக காலை முதல் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயேசு அழைக்கிறார் என்ற குழுமத்திற்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் வந்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் வருமானத் துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதன்படி சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடந்து வந்தது. இந்நிலையில் தற்ப்போது இயேசு அழைக்கிறார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கினதோடு ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் வராத முதலீடுகள் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.