மதுரையில் பதியேற்ற கையோடு கவுன்சிலர் ஒருவர் சுவர் ஏறி குத்து ஓடிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் திமுக பெரும்பானமையான இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்று பதவியேற்றுக்கொண்ட கவுன்சிலர்களில் ஒருவரான சுயேச்சை வேட்பாளர் ஏறி குத்து ஓடிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், மதுரையில் உள்ள செல்லம்பட்டி பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர், பதவியேற்ற கையோடு சுவர் ஏறி குறித்து காரில் தப்பித்தார்.
சுயேட்சை கவுன்சிலரின் ஆதரவை பெற கட்சிகள் போட்டிபோடுவதால் அதனை தவிர்க்க கவுன்சிலர் ஓடியுள்ளார் என கூறப்படுகிறது.