இந்தியாவில் சமீபத்தில் பரவ தொடங்கியுள்ள கரும்பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநில அரசுகள் நோய் பரவலை கட்டுப்படுத்த மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் கரும்பூஞ்சை தொற்று மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் இதுவரையிலும் 8,848 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. கரும்பூஞ்சை தொற்று பரவலில் முதலிடத்தில் குஜராத் உள்ளது. குஜராத்தில் கரும்பூஞ்சை தொற்றால் 2,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 2 ஆயிரம் பேரும், தமிழகத்தில் 40 பேரும் பாதிக்கபட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுவரை கரும்பூஞ்சை தொற்றால் 200க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.