100 கோடி கொரொனா தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ள இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் ஐநா பாராட்டுகள் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு உலகம் எங்கும் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸின் இரண்டாம் அலை தற்போது பரவி வருகிறது. விரையில் 3 வது அலை பரவ உள்ளது.
இந்நிலையில், கொரொனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் இந்தியாவில் சுமார் 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தச் சாதனைக்கான உலக சுகாதார அமைப்பு பிரதமர் மோடி, இந்தியா, இந்திய மக்களுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டுகள் தெரிவித்துள்ளது.