பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வந்து விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருப்பதை அடுத்து குமரி கடல் பகுதி முழுவதும் கடலோர காவல் படை கட்டுப்பாட்டில் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
மே 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்கள் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா பாறையில் பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளதை அடுத்து கடலோர காவல் படை குமரி கடல் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் இன்று குமரி கடல் மற்றும் விவேகானந்தர் பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மோப்ப நாய் மூலம் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
விவேகானந்தர் மண்டபத்தில் தனிமையில் பிரதமர் மோடி தியானம் செய்ய இருப்பதை அடுத்து தமிழ்நாடு பூம்புகார் சுற்றுலா முழுவதும் பிரதமர் பாதுகாப்பு துறையின் வசம் வந்துள்ளதாக தெரிகிறது