Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்..! எதற்காக சொல்கிறார் ஆளுநர் ரவி.?

Governor Ravi

Senthil Velan

, செவ்வாய், 28 மே 2024 (12:39 IST)
செங்கோலை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
 
புதிய நாடாளுமன்றம் திறந்தபோது அங்கு தமிழகத்தின் செங்கோலை பிரதமர் மோடி வைத்தார்.  இந்த நிகழ்வின் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ராஜ் பவன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை மீட்டெடுத்து நிறுவியதன் முதலாம் ஆண்டு நிறைவை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
நமது சுதந்திரத்துக்கு வழிவகுத்த அதிகாரப் பரிமாற்றத்தின் வெளிப்படையான கருவியாக விளங்கிய செங்கோலின் புண்ணிய பூமியும் அதன் பிறப்பிடமான தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கும் இது சிறப்புப் பெருமைக்குரிய நாள் என்று தெரிவித்துள்ளார். 


தமிழர் பெருமையின் இந்த அடையாளத்தை வேண்டுமென்றே நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்வதிலிருந்து மீட்டு, அதை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்க கால அவகாசம்.. உணவு பொருள் வழங்கல் துறை அறிவிப்பு..!