Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

திமுகவை இந்திய குடியரசு கட்சி ஆதரிக்கிறது - சே கு தமிழரசன் பேட்டி!

திமுகவை இந்திய குடியரசு கட்சி ஆதரிக்கிறது - சே கு தமிழரசன் பேட்டி!
, சனி, 27 மார்ச் 2021 (16:02 IST)
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இந்திய குடியரசு கட்சி தலைவர் சே கு தமிழரசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

 
அதிமுகவுடன் நாங்கள் 8 முறை கூட்டணி வைத்திருக்கிறோம். மதமாற்ற தடுப்பு சட்டம் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் கூட அமையபட்டது.இங்கும் அந்த சுழல் அமையும். ஊராட்சி தேர்தல்கள் முழுமையாக நடைபெறவில்லை நாங்கள் மட்டும் தான் அவற்றை பற்றி பேசினோம் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் பேசவில்லை. அதிமுக பாஜகவை வெளியேற்ற அவர்களுக்கு பாடம் புகட்ட திமுகவை இந்திய குடியரசு கட்சி ஆதரிக்கிறது.
 
மதவாத சாதிய மத சந்தர்ப்பவாத தலித் மக்களை ஒழிக்க நினைக்கும் அதிமுக பாஜக கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சிறுபான்மை மக்களுக்கு நாள் இந்த அறைகூவல் கொண்ட மக்களுக்கு இந்திய குடியரசு கட்சி கோரிக்கை வைக்கிறது. அதிமுக கூட்டணி சொந்தக்காரர்களின் நானொருவன் ஏழு முறை நான் அவர்கள் கூட்டணியில் போட்டிருக்கிறேன் ஒருமுறை அவர் சொன்ன அவர்கள் சொன்னவர்கள் நின்றார்கள் ஆக எட்டு முறை நான் அவர்கள் கூட்டணியில் இருக்கிறேன்.
 
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் புரட்சித்தலைவர் அம்மா காலத்திலோ ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது ஆனால் இந்த எடப்பாடி அரசு ஏதாவது ஒன்று முன்னெடுத்து இருக்கிறதா அதை குறிப்பிட்டு என்னால் காட்ட இயலவில்லை ஆக இந்த கூட்டணியை ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதரிக்க கூடாது என்பதை இந்திய குடியரசு கட்சி பிரதானமாக அடித்தட்டு மக்களுக்கான அறைகூவலாக முன்னெடுக்கின்றது.
 
இந்த சூழலில் தேர்தல் நடத்துவதற்கான உகந்த சூழல் இல்லை மக்களை அழிவுக்கு ஆக்குகின்ற சூழல் இது. சாதாரண மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். 1 ஆண்டு காலமாக உள்ளாட்சித் தேர்தல் ஊராட்சி ஒன்றியங்களில் பாதி தேர்தல் நடக்கிறது பல பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி தேர்தல் நடைபெறவில்லை 2 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தல் நடைபெறாமல் இருந்து இருக்கிறது.
 
இந்த கூட்டணியை எதிர்ப்பதற்கு வலிமையான கூட்டணி எதுவோ அவர்களை ஆதரிப்போம்.கூட்டணி பற்றி எந்தக் கட்சியிடமும் நாங்கள் இதுவரை பேசவில்லை ஆனால் பாஜக அதிமுக கட்சிகளை வெளியேற்றுவதற்கும் பார்ப்பதற்கும் நாங்கள் ஆதரவாக செயல்படுவோம். நடைபெற இருக்கின்ற இந்த தேர்தல் தமிழ்நாட்டிலும் ஒரு முற்றிலுமாக திமுக கட்சியானது  இந்த தேர்தலில் 8 ஒடுக்கப்பட்ட சரி சமூகத்தை சார்ந்தவர்களுக்கு வாய்ப்பளித்து இருக்கிறது 6 தொகுதியை விசிக கூட்டணிக்கும் ஒரு தொகுதியை மக்கள் விடுதலைக்கும் கொடுத்து இருக்கிறது.
 
ஒரு வேட்பாளரின் பெயரில் அவர் மீது குற்ற வழக்கு இருந்தால் அதை அவரே விளம்பரம் வாயிலாக செய்ய வேண்டும் அதற்கான செலவு அதிகமாக ஆகிறது ஆக அந்த செலவை தேர்தல் கமிஷன் எடுத்து செயல்படுத்தலாம் 50 விழுக்காடு  சந்தேக வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது தலித்துகள் மீது தான். எங்களுடைய சகோதர அமைப்பின் ஏனைய வேட்பாளர்களுக்கு சில பல லட்சங்கள் செயல்படுகிறது இதனை முன்னெடுப்பதற்கு மட்டும் இதனை தமிழக தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும்.
 
பாபாசாகேப் அம்பேத்கர் போராடிய தேர்தல் முறை தான் எங்களுக்கு வேண்டும் இந்த தேர்தல் முறை நிற்க வேண்டாம். தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இப்போது கடிதம் ஒன்றை எழுதுவதற்கு முன் வந்துள்ளோம்.தேவை ஏற்படும்போதுதான் அதற்கான குரல் எழும்.
 
கடந்த தேர்தலில் நாங்கள் மக்கள் நீதி மையம் உடன் கமலஹாசனுடன் கூட்டணி வைத்திருந்த தேர்தலில் அவர்களுக்கு ஒரு நல்ல ஓட்டுகளை பெற்றுத் தந்தோம் எங்களுடைய கட்சி கொள்கையுடைய கட்சி  கொள்கைக்கு ஏற்றார் போல் செயல்படும் ஆகையினால் எங்கள் கோரிக்கையை ஏற்ற கட்சியுடன் மட்டும் தான் கூட்டணி வைத்துக் கொள்வோம் நாங்கள் பல்வேறு கட்சி கூட்டணி வைக்கலாம் ஆனால் எங்களுக்கு பங்கு வேண்டும் என்று நாங்கள் கேட்பது அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது.
 
ஒரு கட்சியினுடைய எல்லாக் கொள்கைகளையும் நாங்கள் அப்படியே ஏற்றுக்கொள்வோம் என்று இல்லை அடிப்படைக் கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் எங்களுக்கு இன்றைக்கு என்ன தேவை எங்களுடைய பார்வையில் என்ன அவசியம் எங்களுடைய பார்வை என்பது பாபாசாகேப் அம்பேத்கரின் பார்வை.
 
எங்கள் ஆதரவு திமுகவுக்கு இருக்கிறது ஆனால் திமுக எங்களை அழைத்து பேசினால் எங்கள் தோழர்களுக்கு சொல்லுவோம்.மதவாத சாதிய வாத சந்தர்ப்பவாத தலித் விரோத 4 கோரிக்கைகளை கொண்ட கூட்டணிக்கு ஆதரவளிப்போம் என்று தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி?