கர்நாடக மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவியதை அடுத்து கர்நாடக எல்லையில் தமிழக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் ஒமிக்ரான் வைரஸ் கர்நாடக மாநிலத்தில் நுழைந்து விட்டது என்பதும் அம்மாநிலத்தில் ஐந்து பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திலும் ஒமிக்ரான் வைரஸ் பரவியதை அடுத்து கர்நாடக தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழக-கர்நாடக எல்லையில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் கண்டிப்பாக பரிசோதனை செய்யப்படும் என்றும் பரிசோதனைக்கு பின்னரே தமிழகம் வர அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது