Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தூத்துக்குடியில் இணைய சேவை தொடங்கியது

தூத்துக்குடியில் இணைய சேவை தொடங்கியது
, திங்கள், 28 மே 2018 (07:27 IST)
தூத்துக்குடியில் இணைய சேவை முடக்கம் நேற்றிரவு ரத்து செய்யப்பட்டது.
கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அசம்பாவிதங்களைத் தடுக்க கடந்த 21 ந் தேதி மாவட்ட நிர்வாகத்தால் 144 தடை போடப்பட்டது. பதற்றம் நிலவியதால் 144 தடை நேற்று வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும்  தூத்துகுடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை நிறுத்தப்பட்டதால் பல முக்கிய வேலைகள் முடங்கின. கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது.
webdunia
இந்நிலையில் தூத்துக்குடியில் 95 சதவீதம் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று காலை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்றிரவு முதல் இணைய சேவை முடக்கத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியகம் உத்தரவு பிறப்பித்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூத்துக்குடி போராட்டம்: ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியீடு!