அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து ரஜினியின் கருத்துக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டு இருந்ததுதான் அவரது பதவி பறிப்புக்கான காரணம் என சொல்லப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலகிதா இறந்த பின்னர் அதிமுக அமைசர்கள் பலர் ஊடங்களில் தலைகாட்ட துவங்கினர். அப்படி, அடிக்கடி தோன்றுபவரில் ஒருவராக இருந்தவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் சமீப காலமாக சர்ச்சைக்குள்ளான பேச்சுக்களை பேசி வருகிறார். இந்நிலையில், விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவரது பதவி பறிப்புக்கான காரணங்களாக பலவற்றை சொல்லி வருகின்றனர். அதில் முக்கியமான கருத்தாக இருப்பது சமீபகாலமாக ரஜினி பேசும் கருத்துகளுக்கு ஆதரவாக பேசிவந்ததும், ரஜினியின் மக்கள் மன்றத்தினருடன் ரகசியத்தொடர்பில் இருந்ததாகவும், கட்சி ஆரம்பித்தால் உறுப்பினர்களோடு அங்கு சென்று சேர முயற்சித்ததுமே காரணம் என சொல்லப்படுகிறது.