முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை இன்று அதிமுகவினர் அமோகமாக கொண்டாடி வரும் நிலையில் ஜெயலலிதாவின் வெண்கல சிலை இன்று அதிமுக அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. முதல்வர், துணை முதல்வர் உள்பட அதிமுக பிரமுகர்கள் அனைவரும் இந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த சிலை குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பெரும்பாலானோர் இந்த சிலை ஜெயலலிதா சிலை போன்றே இல்லை என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நெட்டிசன்களில் ஒருவர் ஒருபடி மேலே போய், எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தையும் ஜெயலலிதா சிலையையும் அருகருகே பதிவு செய்து இந்த சிலை ஜெயலலிதா சிலை இல்லை என்றும், எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி சிலை போன்று உள்ளதாகவும், தனது மனைவி சிலையத்தான் முதல்வர் திறந்து வைத்துள்ளதாகவும் பதிவு செய்துள்ளார். இன்னும் ஒருசிலர் இது சசிகலா சிலை என்றும், வளர்மதி சிலை என்றும் கூறி வருவது பெரிய காமெடியாக உள்ளது. இவை அனைத்தும் காமெடி பதிவுகளாக இருந்தாலும் இந்த பதிவுகள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.