புலி படம் வெளியான போது நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் விஜய் ரூ.5 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது எனவும், அதற்கன அபராத வட்டியை அவர் கட்டிவிட்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து நடிகர் விஜய் பேசிய வசனம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழிசை சவுந்தராஜன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்நிலையில், விஜயை வருமான வரித்துறை குறி வைத்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில் 2015ம் ஆண்டு விஜய் நடித்த புலி படம் வெளியானது போது நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அந்த சோதனையில் புலி படத்தில் நடிப்பதற்காக பெற்ற சம்பளத்தில் ரூ.5 கோடியை வருமான வரி கணக்கில் விஜய் காட்டவில்லை. சோதனைக்கு பின், அதற்கான கூடுதல் வரியை விஜய் செலுத்திவிட்டார். ஆனால், சோதனையில் சிக்கிய ஒருவர் மீண்டும் அதே தவறை செய்தால் அவர் சிறைக்கு அனுப்ப சட்டம் இருக்கிறது. விஜய்க்கு முதல் வாய்ப்பு முடிந்து விட்டது. இனிமேல், அதே தவறை அவர் மீண்டும் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.