சிறை கைதியை தாக்கிய விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி,சிறைகண்காணிப்பாளர் மற்றும்,ஜெயிலர்சஸ்பெண்ட்.....
, புதன், 23 அக்டோபர் 2024 (17:54 IST)
வேலூர் மாவட்டம்,
கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் (30), வேலூர் சிறையில் தாக்கப்பட்ட புகாரின்பேரில் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார் சிறை கைதி சிவகுமார் டிஐஜி வீட்டில் பணம், நகைகளை திருடியதாக சிறைத்துறை காவலர்களால் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் சிவகுமாரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் இந்த வழக்கின் அடிப்படையில் நீதிபதிகள் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதாகவும் இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்
அதன் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தன.
டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடை யில் வேலூர் சரக சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கும் வேலூர் கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் சென்னை புழல் சிறைக்கும் மாற்றப்பட்டனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது போன்ற பெரிய குற்றத்தில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சிறை துறை டிஐஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத் தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்