Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்டாவிற்கும், மோடிக்கும் நன்றி - ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் அதிரடி

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2017 (17:23 IST)
தமிழகத்தில் இளைஞர்கள் ஒன்று சேர காரணமாக இருந்த பீட்டாவிற்கும், மத்திய அரசிற்கும் நன்றி தெரிவிப்பதாக, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடி வரும் மாணவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 

 
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் மற்றும் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகமெங்கும் உள்ள மாணவர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமான போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும், பெண்கள் மற்றும் பொதுமக்களும் குவிந்துள்ளனர். 
 
காவிரி நதி நீர் பிரச்சனை, முல்லை பெரியாறு, தமிழக மீனவர்கள் பிரச்சனை என தமிழகம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஆனால் அப்பொதெல்லாம மாணவர்கள் இப்படி தெருவில் இறங்க போராடியதில்லை. ஆனால் ஜல்லிக்கட்டி விவகாரத்தில் மாணவர்கள் அப்படி ஒதுங்கி வேடிக்கை பார்க்கவில்லை. மதுரை, சென்னை தொடங்கி தற்போது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
 
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் போராடி வரும் சிலர் செய்தியாளர்களிடம் கூறும் போது “ இளைஞர்கள் இப்படி ஒன்று கூடி போராட காரணமாக இருந்த பீட்டா அமைப்பு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இப்படி எல்லாவற்றுக்கும் நீங்கள் தடை போட்டுக் கொண்டே இருங்கள். நாங்கள் ஒன்றிணைந்து போராடி எங்கள் ஒற்றுமையையும், வலிமையையும் அதிகரித்துக் கொண்டே இருப்போம்” என அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments