Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை ஓணம் பண்டிகை; விண்ணை முட்டிய பூக்கள் விலை! – வியாபாரிகள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (11:24 IST)
நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பூக்கள் விலை கடுமையாக விலை உயர்ந்துள்ளன.

கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை தமிழகத்தில் பல மாவட்ட மக்களால் கொண்டாடப்படுகிறது. நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர்ந்து முகூர்த்த நாட்கள் என்பதால் பூக்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இதனால் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கோவையில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. முல்லை கிலோ ரூ.1200, ரோஜா ரூ.200, ஆரஞ்சு செவ்வந்தி ரூ.200, மஞ்சள் செவ்வந்தி ரூ.160, துளசி ரூ.60, மரிக்கொழுந்து ரூ.50, அரளிப்பூ ரூ.250 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது.

தொடர்ந்து மூன்று நாட்கள் முகூர்த்தம் வருவதாலும், ஓணம் பண்டிகையாலும் பூக்கள் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments