Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா என்னை தமிழக முதல்வராக்க விரும்பினார்: குண்டை தூக்கி போடும் லேடி சூப்பர் ஸ்டார்

Advertiesment
ஜெயலலிதா
, வியாழன், 14 பிப்ரவரி 2019 (12:04 IST)
ஜெயலலிதா என்னை முதலமைச்சர் ஆக்க விரும்பினார் என நடிகை விஜயசாந்தி கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான நடிகை விஜயசாந்தி, பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் திரைத்துறையை விட்டுவிட்டு அரசியலில் நுழைந்தார். இவரது அதிரடி நடிப்பால் திரைத்துறையில் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் கிடைத்தது. தமிழகத்தில் அதிமுகவிற்கு ஆதரவாகெல்லாம் இவர் பிரச்சாரம் செய்தார்.
 
இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் அவர், ஜெயலலிதா என்னுடைய தோழி. அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போது அவரை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
ஜெயலலிதா


சொத்துகுவிப்பு வழக்கில் அவர் பதவியிழந்த போது என்னை முதல்வராக பொறுப்பேற்க சொன்னார். ஆனால் அப்போது அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அப்போது தெலுங்கானாவுக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். அதனால் தமிழக அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது என்று கூறி விட்டேன். அதன்பின்னரே பன்னீர்செல்வம் முதலமைச்சரானார் என அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேப்டனின் சென்னை வருகை – புத்துணர்ச்சிப் பெறுமா தேமுதிக?