Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா சுயநினைவோடு இருக்கிறார்; செய்தித்தாள்களை படிக்கிறார்: செய்தித்தொடர்பாளர் உறுதி

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (11:25 IST)
ஜெயலலிதா நலமோடு இருக்கிறார், சுயநினைவோடு இருக்கிறார். எல்லா செய்தித்தாள்களையும் படிக்கிறார் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.


 

கடந்த இரண்டு மாத காலங்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சனிக்கிழமை அன்று [19-11-16] சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இதனால், பெருமகிழ்ச்சி அடைந்த அதிமுகவினர் அப்போலோ மருத்துவமனைக்கு வெளியே, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், கோவில்களில் சிறப்புப் பூஜைகளும் நடத்தினர்.

முதலமைச்சர் ஜெயலலிதா பொதுச்சிறப்பு பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், "முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டார். முதல்வர் ஜெயலலிதா நலமோடு இருக்கிறார், சுயநினைவோடு இருக்கிறார்.

எல்லா செய்தித்தாள்களையும் படிக்கிறார், இப்போது சிறப்பு பொதுவார்டில் இருக்கிறார், வெகு விரைவில் மருத்துவமனையில் இருந்து கோட்டைக்கு வருவார். கோப்புகளை பார்ப்பார், அந்த திருநாளை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments