தமிழ் நாட்டு எம்பிக்கு புதுச்சேரியில் என்ன வேலை என ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவருக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜிப்மர் மருத்துவமனைக்கு தமிழக எம்பி ரவிக்குமார் சென்றிருந்த நிலையில் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கூறியிருப்பதாவது:
ஜிப்மர் வெறும் புதுச்சேரிக்கான மருத்துவமனை கிடையாது, அனைத்து மாநில மக்களும் சிகிச்சை பெறும் ஒன்றிய அரசின் மருத்துவமனை. விழுப்புரம் எம்.பி.க்கு இங்கு என்ன வேலை என துணை நிலை ஆளுநர் கேட்கிறார், ஜிப்மரில் அதிகளவில் விழுப்புரம் மாவட்ட மக்கள் சிகிச்சை பெற்றுவருவதால் எனக்கு அக்கறை உள்ளது
ஜிப்மருக்கான நிதியை உயர்த்தி தர வேண்டும் என நாடாளுமன்றத்தில் நான் கோரிக்கை விடுத்த பின்னரே, நிதி உயர்த்தப்பட்டது. துணை நிலை ஆளுநர் மருத்துவமனைக்கு உதவி செய்ய வேண்டுமே தவிர, கட்டண உயர்வுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று கூறினார்,