காங்கிரஸ் அறக்கட்டளை செயல்பாடுகள் குறித்து உரிய விசாரணை வேண்டும் என தமிழக பாஜக கூறியுள்ளதற்கு பதில் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி.
காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு விற்க முயன்றதாக சமீபத்தில் எழுந்த புகார் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்த விளக்கமளித்த காங்கிரஸார், தனியாருடனான ஒப்பந்தம் மூப்பனார் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது என்றும் தற்போது அது காலாவதியாகிவிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது. எனினும் காங்கிரஸ் அறக்கட்டளையின் செயல்பாடுகள் தொடர்பான விரிவான விசாரணை தேவை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதற்கு ட்விட்டர் மூலமாக பதில் கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ” காங்கிரஸ் அறக்கட்டளை வெளிப்படையான செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது.வருமானவரி தாக்கல் செய்கிறது.RSS என்ன செய்கிறது? பிஜேபியின் வருமானம் கடந்த 6 வருடங்களில் பலமடங்கானது எப்படி? ஒரு MLAக்கு 100 கோடி விலைபேச பிஜேபிக்கு எங்கிருந்து பணம் வருகிறது?பிஜேபி தலைவர் முருகன் விளக்குவாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.