நேற்று மதுராந்தகம் அருகே 4 மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த நிலையில் அவர்கள் கீழே தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தானாக முன்வந்து நீதிபதி வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுராந்தகம் மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து தானாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும் என வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம் செல்பவர் தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்.
அப்போது நீங்களே ஏன் பொதுநல மனுவாக தாக்கல் செய்யக்கூடாது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், தலைமை நீதிபதி என்ற முறையில் இந்த சம்பவத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன், படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் ஆபத்துகளை சந்தித்து வருவதை அடுத்து இதனை தடுக்க நெறிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள நீதிபதி விரைவில் விசாரணை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.