மதிமுக பொது செயலாளர் வைகோ ஒரு அரசியல் நாகரீகமற்ற நபர் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது குறித்து, மாநிலங்களவையில் பல எதிர்ப்புகள் கிளம்பியதன் இடையில், மதிமுக பொது செயலாளர் வைகோ காங்கிரஸின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். இதனை கண்டிக்கும் வகையில், வைகோ ஒரு அரசியல் நாகரீகமற்றவர் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
மேலும், வைகோவை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு, அவர் ஒரு அரசியல் பச்சோந்தி என்பது தெரியும் என்று மிகவும் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு வைகோ இவ்வாறு பாஜகவிற்கு துணை போகலாமா என்றும் கே.எஸ்.அழகிரி வைகோ மீது குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.