Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபாலி வசனத்தை மாற்றிப் பேசிய பெண்ணுக்கு ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி

கபாலி வசனத்தை பேசியரை நேரில் சந்தித்த ரஜினி

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (08:49 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி பட வசனத்தை மாற்றி பேசிய ஒரு பெண்மணியை ரஜினி நேரில் அழைத்து சந்தித்து பாராட்டியுள்ளார்.


 
 
கபாலி படத்தில் ரஜினி பேசும் ‘கபாலிடா’ வசனம் பல ரசிகர்களை கவர்ந்தது. தமிழ் மொழி தெரியாத சீனா, ஜப்பான் ரசிகர்கள் கூட அந்த வசனத்தை பேசி வீடியோ வெளியிட்டனர்.
 
‘அம்மாடா’ என்று தமிழக சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் புகழ் பாடும் அளவுக்கு போனது அந்த வசனம். 
 
மேலும் சிலர், அந்த வசனத்தை கொஞ்சம் மாற்றி பேசி இணையத்தில் வெளியிட்டனர். அதில் குறிப்பாக, சென்னையை சேர்ந்த ஒரு பெண்  "பொண்டாட்டினா பழைய படத்துல வரமாதிரி தழைய தழைய பொடவை கட்டிகிட்டு, தல நிறைய பூவ வெச்சிகிட்டு... நெத்தி நிறைய குங்குமம் வெச்சிகிட்டு ‘ஏ பொண்டாட்டி’ அப்படின்னு கூப்பிட்ட உடனே, வந்து காலப் புடிச்சு.. சொல்லுங்க அத்தான்னு வந்து நிப்பாளே.. அந்த மாதிரி பொண்டாட்டின்னு நெனச்சியா... பொண்டாட்டிடா” என்று பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்தது.
 
அந்த வீடியோவை ரஜினியும் கண்டு ரசித்துள்ளார். எனவே அவரை நேரில் சந்திக்க விரும்பிய ரஜினி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரிடம் பேச, அந்த பெண்ணுக்கு தலை கால் புரியவில்லையாம்.
 
இதையடுத்து, சென்னை சேமியர்ஸ் சாலையில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டில் அந்த பெண்ணை ரஜினி சந்தித்தார்.  அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். 
 
இந்த மாதிரி பேசனும்னு உங்களுக்கு எப்படி தோனுச்சு. இதைக்கேட்டு உங்க சொந்தக்காரங்கலாம் என்ன சொன்னாங்க.. என்று ஆர்வமாக ரஜினி கேட்ட கேள்விகளுக்கு.. வெட்கத்துடன் பதில் சொன்னாராம் அந்த பெண்..
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments