Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 25 May 2025
webdunia

அண்ணாமலைக்காக டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த கலா மாஸ்டர்!

Advertiesment
கலா
, திங்கள், 5 ஏப்ரல் 2021 (08:35 IST)
அண்ணாமலைக்காக டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த கலா மாஸ்டர்!
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று இரவு 7 மணி உடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது என்பதும் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்று இறுதிகட்ட பிரச்சாரத்தின்போது அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்காக டான்ஸ் மாஸ்டர் கலா தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஒரு கட்டத்தில் அவர் உற்சாகமாகி அண்ணாமலை அருகில் நின்று கொண்டே வாக்கு கேட்டுக் கொண்டிருந்தவர் திடீரென டான்ஸ் ஆட தொடங்கினார். அதற்கேற்றவாறு பாடல்கள் ஒலிக்கத் தொடங்கியதும் பிரச்சார வாகனத்திலேயே டான்ஸ் ஆடினார் என்பதும் ஒரு கட்டத்தில் மீண்டும் உற்சாகமாகி வேனில் இருந்து கீழே இறங்கி டான்ஸ் ஆடி பொது மக்களிடம் வாக்கு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அவர் ஆடியதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த அண்ணாமலையும் கைதட்டி அவரும் டான்ஸ் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கமல்ஹாசனுக்காக அக்ஷரா ஹாசன் மற்றும் சுகாசினி டான்ஸ் ஆடி வாக்குப்பதிவு கேட்ட வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் வைரல் ஆன நிலையில் தற்போது கலா மாஸ்டரின் டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் அதிக வெப்பம்; வாக்குப்பதிவு சதவிகிதம் குறையுமா?