Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி மேலாண்மை வாரியம் இல்லையேல் ராஜினாமா! பன்னீர்செல்வம் அதிரடிஅறிவிப்பு

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (08:08 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விடுத்த ஆறுவார கால கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படாததால், இன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒருபுறம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இன்னொரு புறம் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், காவிரி மேலாண்மை வாரியம் இல்லையே அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று மிரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நாளை முதல்வரிடம் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கொடுப்பேன் என்று கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஆனால் இவருடைய அறிவிப்பை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். ராஜினாமா கடிதத்தை கவர்னர் அல்லது சபாநாயகரிடம் அளிக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்கவிருப்பதாக கூறுவது கண்துடைப்பு நாடகம் என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments