கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தின் போது பல பொருட்களை போராட்டக்காரர்களில் சிலர் தூக்கிச் சென்றது இணையத்தில் வெளியானது.
கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மரணமடைந்ததையடுத்து ஞாயிற்றுக் கிழமையன்று நடந்த கலவரத்தில் பள்ளிக்கூடச் சொத்துகள்சூறையாடப்பட்டிருக்கின்றன. காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிது.இதையடுத்து தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்கள் கலவரக்காட்சிகள் வீடியோக்களாக வெளியாகி அதிகளவில் பரவின. இதையடுத்து சிறுமியின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கலவரத்தின் போது சிலர் பள்ளியின் மேஜை, பென்ச், சிலிண்டர் போன்ற பொருட்களை எடுத்துச் சென்றனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகின. இந்நிலையில் எடுத்த பொருட்களை திரும்ப ஒப்படைக்குமாறு அந்த பகுதிகளில் தண்டோரா மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதையடுத்து பலரும் தாங்கள் எடுத்த மேசை, பென்ச் மற்றும் இன்னும் பிற பொருட்களை சாலையின் ஓரங்களில் எடுத்துவந்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.