நடிகர் கமல்ஹாசன் இன்று தமிழகத்தில் பிறப்பு முதல் இறப்பு அரசு ஊழியர்களால் வாங்கப்படும் லஞ்சம் பற்றிய ரூபாய் பட்டியலை வெளியிட்டு ஆளும் கட்சி மற்றும் திராவிட கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது முதல்வர் பழனிசாமி கமல்ஹாசனை அரசியலில் அவர் ஒரு ஜீரோ என விமர்சித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதற்கான பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.
அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே நிச்சயம் தனது கட்சி வெல்லும் என எதிர்ப்பார்ப்புடன் கமல் உள்ளார்.
நேற்று மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணிக்குப் பேசிவருவதாக வெளியான தகவலை கமல் மறுத்திருந்தார்.
தமிழகத்தில் திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேரப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் , பிறப்பு முதல் இறப்பு அரசு ஊழியர்களால் வாங்கப்படும் லஞ்சம் பற்றிய ரூபாய் பட்டியலை வெளியிட்டு ஆளும் கட்சி மற்றும் திராவிட கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக அதிமுகவைக் சாடி வருவதால் அவருக்கு அதிமுகபிரமுகர்களும் அமைச்சர்களும் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது முதல்வர் பழனிசாமி கமல்ஹாசனை அரசியலில் அவர் ஒரு ஜீரோ என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் சாதனையாளராக இருந்தாலும் அரசியலில் அவர் ஜீரோதான் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுப்பார் எனத் தெரிகிறது.