என்னை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்த அதிமுக அரசு முயற்சி செய்தது என கமல்ஹாசன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இன்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு காலத்தை வென்றவன் என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தை வெளியிட்ட கமல்ஹாசன் அதன் பின்னர் பேசிய போது விஸ்வரூபம் படத்தின் பிரச்சனையின் போது அதிமுக அரசு என்னை நடுத்தெருவுக்கு கொண்டு வர முயற்சித்தது என ஜெயலலிதாவை மறைமுகமாக அவர் குற்றம்சாட்டினார்
மேலும் எம்ஜிஆர் யாருக்கும் சொந்தமில்லை என்றும் மற்ற நிலங்களை பட்டா போட்டு விற்பது போல் எம்ஜிஆரையும் பட்டா போட்டுக் கொள்கிறார்கள் என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்கள் கமல்ஹாசன் முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார் என்பதையே இது காட்டுகிறது என்றும் எம்ஜிஆர் இருந்திருந்தால் விஸ்வரூபம் படத்தின்போது பிரச்சனை வந்திருக்காது என அவர் கூறியது இது முழுக்க முழுக்க போலித்தனம் என்றும் கூறியுள்ளார்