Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமலை வம்பிழுத்த தமிழிசை - வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Advertiesment
Tamilisai soundararajan
, வெள்ளி, 13 ஜூலை 2018 (11:10 IST)
நடிகர் கமல்ஹாசனின் பகுத்தறிவு குறித்து விமர்சித்த தமிழைசை சவுந்தராரஜனை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 
நடிகரும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது கட்சியின் கொடியை ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் ஏற்றினார். மேலும் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்நிலைக்குழுவை கலைத்த கமல்ஹாசன் அதற்கு பதிலாக பொதுக்குழு உறுப்பினர்களை அறிவித்தார்.
 
இதுகுறித்து கருத்து கூறிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'மய்யம் என கட்சி ஆரம்பித்தவர் போலி பகுத்தறிவு உள்ளவர். கட்சி தொடங்கியதும், கொடி ஏற்றியதும் அமாவாசையில்” என்று கமல்ஹாசனே யோசிக்காத விஷயத்தை அவர் கூறியிருந்தார்.
Tamilisai soundararajan

 
தமிழிசையின் இந்த கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களும், கமல்ஹாசனின் ஆதரவாளர்களும் சமூக இணையதளங்கள் வாயிலாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Tamilisai soundararajan


Tamilisai soundararajan

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறுபிறவி எடுத்த நாளை ஆரவாரத்துடன் கொண்டாடிய பாஜக அமைச்சர்