Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டம் : கமல்ஹாசனின் அதிரடி அரசியல்

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (12:49 IST)
நடிகர் கமல்ஹாசன் வருகிற 21ம் தேதி ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி தனது பிறந்த ஊரான ராமநாதபுரத்தில் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும், மறைந்த முன்னள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.  
 
அந்நிலையில், கடந்த 22ம் தேதி காலை தனது இல்லத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். முடிவில், மதுரையில் பிப்ரவரி 24ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அது வதந்தி என கமல் மறுப்பு தெரிவித்தார்.
 
இந்நிலையில், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். முடிவில், பிப்.21ம் தேதி அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பின்பு, அதே ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டத்தை நடத்துவது என கமல்ஹாசன் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments