Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருக்கு போட்டியாக டெல்டாவில் கமல் செய்த வேலை...?

Webdunia
சனி, 1 டிசம்பர் 2018 (16:19 IST)
தமிழகத்தில் தற்போது அரசியல் நிலவரம் கஜாபுயலால்  பதிக்கப்பட்ட டெல்டா பக்தியிலேயே மையமிட்டது போல அனைத்து அரசியல் தலைவர்களும் டெல்டா மாவட்ட மக்களுக்கு மனித நேயத்தில் வெளிச்சமாக சேவையாற்றிக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் புயல் பாதித்த டெல்டா பகுதிக்கு மூன்றாவது முறையாக  சுற்றுப்பயணம் செய்துள்ள மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம்  குறைகளை கேட்டறிந்தார். 
 
தஞ்சை மாவட்டத்தில் உள்ள தம்பிக்கோட்டை கிழக்காடு என்ற பகுதிக்கு தன் கட்சி காரர்களுஅன் சென்ற கமல் அங்குள்ள ஒரு கடையில் டீ குடித்தார். அவரகள் கட்சியினர் குடித்த அத்தனை டீக்கும் அவரே காசு கொடுத்தார். அப்போது அங்கு வந்த ஒரு பாட்டி கமல்ஹாசனின் கன்னத்தை பிடித்து கிள்ளி பேசினார். சிறிது நேரத்தில் கமலை சுற்றி பொதுமக்கள் கூடி தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
 
கமல் சென்றவிடமெல்லாம் மக்கள் தங்கள் பகுதியில் அதிகாரிகள் வந்து எங்களைக் காணவில்லை என்று புகார் தெரிவித்தனர் .

சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தன் அதிமுக அமைச்சர்களுடன் டெல்டா பகுதியில் உள்ள கடையில் டீ குடித்திருந்தார். இப்போது கமலும் எடப்பாடியாருக்குப் போட்டியாக தன் கட்சி நிர்வாகிகளுடன் கள ஆய்வு செய்து இதுபோல வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டு வருகிறாரோ என்று அரசியல் விமர்சர்கள் கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments