திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கனல் கண்ணன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணையை அடுத்து கனல் கண்ணனுக்கு நீதிபதி ஜாமீன் வழக்கு உள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் நாகர்கோயில் சைபர் கிரைம் அலுவலகத்தில் 30 நாட்கள் கையெழுத்து இடவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டதலை அடுத்து இன்று கனல் கண்ணன் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஆனாலும் அவர் நாகர்கோவிலுக்கு கையெழுத்திட வேண்டும் என்பதால் அந்நகரில் தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.