காஞ்சிபுரத்தில் அருள் பாலிக்கும் அத்திவரதரின் தரிசனம் இன்று குறிப்பிட்ட நேரத்திற்கு ரத்து செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
40 வருடங்களுக்கு ஒரு முறை மக்களுக்கு அருள் வழங்கும் அத்திவரதர் தற்போது நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்நிலையில் இன்று கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டு 5 மணி முதல் 8 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி, இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு, மதியம் 2 மணியுடன் கிழக்கு கோபுரம் மூடப்படுகிறது. முக்கிய பிரமுகர்கள் தரிசன வழியும் மதியம் 2 மணிக்கு மூடப்படும். மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம், அதன் பின்னர் மீண்டும் 8 மணிக்கு தரிசனம் துவங்கும்.
மாலை 5 - 8 தரிசனம் ரத்து செய்யப்படுவதால் இரவு வழக்கமான நேரத்தை விட கூடுதல் நேரம் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.