Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அத்திவரதரை தரிசிக்க விஐபி-க்களுக்கு புதிய கட்டுபாடு

அத்திவரதரை தரிசிக்க விஐபி-க்களுக்கு புதிய கட்டுபாடு
, வெள்ளி, 26 ஜூலை 2019 (19:07 IST)
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் விஐபிக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கோலாகலமாக நடந்து வருகிறது. ஜூலை 1 முதல் ஆகஸ்டு 17 வரைக்கும் இந்த தரிசனம் நடைபெறும். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஐபி தரிசனத்துக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் ஆன்லைனில் பதிவு செய்பவர்களை அனுமதிக்க இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

விஐபி பாஸ் வைத்திருப்பவர்கள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 வயது மகளுடன் மாடியில் இருந்து குதித்த தந்தை ...