தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் சென்னையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அவ்வப்போது கஞ்சா உட்பட போதை பொருட்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர் என்பதும் இது குறித்த கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு விடுதியில் போதைப்பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்த நிலையில் காவல்துறையினர் அதிரடியாக அந்த விடுதி அறையில் சோதனை செய்தனர்
அப்போது அங்கு இருந்த 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் பெண் ஐடி ஊழியர் ஒருவரும் கால் டாக்ஸி டிரைவர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கஞ்சா விவகாரத்தில் பெண் ஐடி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.