Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா பதில்..!

Siva
வியாழன், 4 ஏப்ரல் 2024 (18:56 IST)
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடகா திட்டவட்டமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ,புதுவை ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்ற நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது

பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் தற்போது வறட்சி காரணமாக குடிநீர் பிரச்சனை நிலவுவதால் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்

மேலும் தண்ணீர் இருக்கும்  சூழலை கருத்தில் கொண்டு தான் தண்ணீர் திறக்க முடியும் என்றும் அவர்கள் கூறியது தமிழகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்டதா? தலைமை ஆசிரியை மீது பெற்றோர் புகார்..!

நாம் தமிழரிலிரிந்து விலகி விஜய் கட்சியில் சேர்ந்த 500 பேர்! - அதிர்ச்சியில் சீமான்??

கனமழை எதிரொலி: சென்னை விமானங்கள் தாமதம்.. பயணிகள் அதிருப்தி..!

கள்ளக்காதலனுடன் மனைவி எடுத்த செல்பி! மாமியார் வீட்டுக்கே அனுப்பி செய்த ரகளை!

ராகுல் காந்தி பொய் சொல்கிறார்; தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments