Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா கால்பந்து போட்டியை துரை வைகோ எம்.பி.துவக்கி வைத்தார்

கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா கால்பந்து போட்டியை துரை வைகோ எம்.பி.துவக்கி வைத்தார்

J.Durai

, திங்கள், 10 ஜூன் 2024 (13:13 IST)
முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் மற்றும் இரு பாலருக்கு நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில்.வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு திருச்சி காவிரி கரை அருகில் அமைந்துள்ள தேசிய  மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில்    கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்  வரவேற்றார்.
மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலை வகித்தார்.   
 
இதில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்டச் செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி   
திமுக கழகக் கொள்கை பரப்பு செயலாளர்-கழக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி என்சிவா,கழக செய்தி தொடர்பாளர்-மாநிலங்களவை உறுப்பினர்  கனிமொழி என்விஎன்.சோமு  , பேராசிரியர்  பர்வீன் சுல்தானா  இக்கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு கலைஞர் புகழ் பற்றி பேசினர்.
 
அதனைத் தொடர்ந்து கால்பந்து விளையாட்டு போட்டிகளில்  வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
 
இந் நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது :-
 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போட்டியில் துரை வைகோ ஆகிய நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்.
 
நாடாளுமன்றத்தில் உங்களுடைய குரல் திருச்சி பொதுமக்கள் குரலாக ஓங்கி ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை.
என்று பேசினார்.
 
வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்காக நாங்கள் உழைப்போம்.
திருச்சி கிழக்கு தொகுதியில் தான் அதிக வாக்குகள் பதிவானது என்பதில் பெருமை கொள்கிறோம்.
 
இதைத் தொடர்ந்து ஆண்கள் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்து திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ பேசினார்.
 
தொடர்ந்து பெண்கள் விளையாட்டு போட்டியை தொடங்கி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் பேசினார்.இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா,பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் சரண்யா   திமுகவைச் சார்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளியுறவுத் துறையை தக்கவைக்கிறாரா ஜெய்சங்கர்?வெளிநாட்டு தலைவர்களுடன் சந்திப்பு