கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால் ஸ்டாலினால் ஒரு கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நான் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை புள்ளிவிவரத்துடன் துண்டு சீட்டு இல்லாமல் என்னால் பேச முடியும். கடந்த மூன்று ஆண்டு ஆட்சியில் நிறைவேற்ற திட்டங்களை பற்றி முதல்வர் பேச தயாரா என்று எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார்.
அம்மா மினி கிளினிக் என்ற திட்டத்தை அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக தான் ரத்து செய்துவிட்டனர் என்றும், அதேபோல் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் ரத்து செய்துவிட்டனர் என்றும், டெல்டா விவசாயிகளுக்கு முழுமையாக உரம் கிடைக்காததால் திறமையற்ற அரசு நடந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களை ஏமாற்றி கொள்ளை புறம் வழியாக ஆட்சிக்கு திமுக வந்துவிட்டது என்றும், 2021 தேர்தல் அறிக்கையில் வெளியேற்றிய திட்டங்களை 10 சதவீதம் கூட இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நான் சாதாரண கிளை செயலாளராக இருந்து பொதுச்செயலாளராக உயர்ந்தவன் என்றும், கருணாநிதி அடையாளத்தை வைத்து தான் ஸ்டாலின் முதல்வர் ஆனார் என்றும், கருணாநிதி குடும்பத்தில் மட்டும் ஸ்டாலின் பிறக்கவில்லை என்றால் அவரால் ஒரு கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.