கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே காமராஜர் சிலை அருகேயும், மனோகரா கார்னர் சிக்னல்களின் கீழ்புறம்., அந்தந்த சிக்னல்களில் நிற்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் கரூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து நூதன விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய சம்பவம் இப்பகுதி வாகன ஒட்டிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
முதலில் சிக்னல்களில் நிற்கும் நேரத்தில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மாரிமுத்து, இருசக்கர வாகன ஒட்டிகளிடம் உடனேயே ஒரு துண்டு சீட்டு அதாவது விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு சீட்டுகள் கொடுத்ததோடு., அதையே உறுதி மொழியாக நான் படித்த பின்னர் நீங்களும் படியுங்கள் என்றார். பின்னர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து வாசகங்களை படித்தார். அந்த துண்டு பிரசூரத்தில் இரண்டு சக்கர வாகன ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலை கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம்.
இரண்டு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவரும் கண்டிப்பாக தலைகவசம் அணிந்து செல்வோம், மது அருந்தி விட்டு இரண்டு சக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ ஓட்ட மாட்டோம், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்த்ய் வாகனத்தினை ஓட்டுவோம், நீதிமன்ற உத்தர சட்டத்தை மதிப்போம் உள்ளிட்ட 11 விழிப்புணர்வு வாசகங்கள் அந்த துண்டு விழிப்புணர்வு காகிதத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், அதை அனைவரும் உறுதி மொழி மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார், இவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் வாகன ஓட்டிகளும் உறுதி மொழிகளை வாசித்து இதே போல சாலைவிதிகளை மேற்கொள்வோம் என்று கூறி சென்றனர்.
இந்த சம்பவம் காவல்துறை மற்றும் பொதுமக்களிடமும் பெரும் உற்சாகத்தினையும், வரவேற்பினையும் பெற்றுள்ளது.