Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

காவிரியில் அதிகப்படியான நீர்: கரூர் ஆட்சியர் ஆய்வு

காவிரியில் அதிகப்படியான நீர்: கரூர் ஆட்சியர் ஆய்வு
, செவ்வாய், 24 ஜூலை 2018 (17:31 IST)
மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதால், கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றுப் படுகைகளிலும் வெளியேறும் நீரை கரூர் கலெக்டர் அன்பழகன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு



மேட்டூர் அணையானது நேற்று முழுவதும் நிரம்பியதோடு, அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து காவிரி நீரானது உபரிநீர் மற்றும் இதர நீர்கள் பல்வேறு வழியாக இரவு வரை மட்டும் 80 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது. இந்நிலையில், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அதாவது காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டது.


இந்நிலையில் கரூர்  மாவட்டம்., மண்மங்கலம் வட்டம் பகுதிக்குட்பட்ட நொய்யல், செட்டிபாளையம், தவிட்டுப்பாளையம்,  கிருஷ்ணராயபுரம்  வட்டத்திற்குட்பட்ட மாயனூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றுப் பாதைகளில் நீர் வருவதை கரூர் கலெக்டர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ஆய்வின் போதே, கரூர் கலெக்டர் அன்பழகன்  பொது மக்களிடம், "மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதால் கரையோரங்களில்  உள்ள மக்கள் தங்களது உடைமைகளுடன் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும் என்றும்,

ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், குழந்தைகளை ஆற்றில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தும்படியும் கூறிய கரூர் கலெக்டர் அன்பழகன்,     கரையோரம் நின்று செல்பி புகைப்படம் எடுப்பதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும்" பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யப்ரகாஷ், வருவாய்க் கோட்டாட்சியர் சரவணமூரத்தி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலுக்கு இல்லாத டிமாண்ட் கோமியத்திற்கு... அப்படி என்ன விஷயம்?