தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழக அரசால் 14 ஆயிரம் கோடி ரூபாயில் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக 700 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் காரணமாக கரூர், திருச்சி, புதுகை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வரும் 14ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் தமிழக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
நீண்ட நாள் கனவாக இருந்த காவிரி குண்டாறு திட்டத்திற்கு முதல் கட்டமாக 700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது தமிழக மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது