Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்ட ஆட்சியர் நவீன் பாபு தற்கொலை வழக்கு: பெண் அரசியல்வாதி திவ்யா கைது..!

Mahendran
புதன், 30 அக்டோபர் 2024 (12:19 IST)
கேரள மாநிலத்தின் கண்ணூர் கூடுதல் மாவட்ட ஆட்சியர் நவீன் பாபு தற்கொலை வழக்கில் பெண் அரசியல்வாதியும் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரமுகருமான திவ்யா கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க ஒப்புதல் அளிக்க கோரி, மாவட்ட ஆட்சியரிடம் பஞ்சாயத்து தலைவர் திவ்யா விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் சில குறைபாடுகள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் நவீன் பாபு நிறுத்தி வைத்துள்ளார் என்று தெரிகிறது.

இதனை அடுத்து, சில நாட்களில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், வழியனுப்பு விழாவில் விருந்தினராக வந்த திவ்யா, தனது விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்ததே தான் பணியிட மாற்றத்துக்கு காரணம் எனக் கிண்டல் செய்தார்.

இதையடுத்து, அடுத்த நாள் நவீன் பாபு தூக்கிலிடப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து, நவீன் பாபுவின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் திவ்யா மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கு உள்பட சில பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், தனக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வேண்டும் என்று திவ்யா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில மணி நேரங்களில் திவ்யா கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments