தமிழர் திருநாளான பொங்கலை கேரளாவில் வாழும் தமிழர்கள் கொண்டாடும் வகையில் கேரள அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தை முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவிலும் திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதிக அளவில் வசித்து வரும் தமிழர்களும் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையை கேரள அரசு ஜனவரி 15ம் தேதி அறிவித்திருந்தது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளாவில் வாழும் தமிழர்களும் பொங்கல் கொண்டாடும் வகையில் நாளை ஜனவரி 14ம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிலையில் தற்போது கேரள அரசு தமிழர்கள் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் நாளை பொங்கல் விடுமுறையை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.